மல்லாவி பொது நூலகத்தில் சிறுவர் பிரிவொன்று பிரத்தியேகமாக 2023.07.25 அன்று எமது பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் அழைப்பின்பெயரில் பிராந்திய உள்;ராட்சி உதவி ஆணையாளர் திரு.ச.யசிந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
நூலகங்களை அபிவிருத்தி செய்து கல்வி அறிவுள்ள சமுதாயத்தினை உருவாக்குதல் எனும் கருப்பொருளின் கீழ் LDSPநிதி உதவித்திட்டத்தின் கீழ் எமது பிரதேச சபையினால் மல்லாவி பொது நூலகத்தில் சிறுவர் பிரிவொன்று பிரத்தியேகமாக 2023.07.25 அன்று எமது பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் அழைப்பின்பெயரில் பிராந்திய உள்;ராட்சி உதவி ஆணையாளர் திரு.ச.யசிந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. எனவே இந்நூலகத்தினை துணுக்காய் பிரதேச செயலக பிரிவினைச் சார்ந்த சிறுவர்கள் பயன்படுத்தி பயனைப் பெற்றுக்கொள்வதுடன் இப் பொது நூலகத்தில் ஏனைய பிரிவுகளும் இயங்கி வருவதனால் அப்பிரிவுகளுக்கென உயர்தரத்திலான பல புதிய புத்தகங்களும் கொள்வனவு செய்யப்பட்டு பாவனைக்காக விடப்பட்டுள்ளது. எனவே பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என அனைவரும் இச்சேவையினை பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments